Homeசெய்திகள்மாவட்டம்மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் நிலவும் கடும் காலதாமதம் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

மழையில் நனைந்து வீணாகும் குறுவை நெல்:
பரவலூர், கட்சிப்பெருமாநத்தம், எருமனூர், தொட்டிக்குப்பம், ராசாப்பாளையம், தொரவலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல்லை விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளனர்.

we-r-hiring

இப்பகுதியில் பகலில் கடுமையான வெயிலும், இரவில் மழை பெய்து வருவதாலும் வெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. நனைந்த நெல்லை மீண்டும் காயவைத்து உலாத்துவதற்கு ஒரு விவசாயிக்குச் சராசரியாக ரூ.5,000 வரை கூடுதல் செலவு ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

சிறு விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.50 லஞ்ச வசூல்?
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையான வரிசை பின்பற்றப்படாமல், பின்புறமாக வந்தவர்களின் நெல் முன்னதாகக் கொள்முதல் செய்யப்படுவதாகச் சிறு விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், நெல்லைக் கொள்முதல் செய்ய பெரிய விவசாயிகளிடம்: மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை – சிறு விவசாயிகளிடம்: மூட்டைக்கு ரூ.50 வரை திறந்தவெளியில் லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

1 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்:
விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் புதிய நெல் மூட்டைகளைச் சேமிக்க இடமில்லாமல், வழக்கமாக ஒரு நாளைக்குக் கொள்முதல் செய்யப்படும் 900 மூட்டைகளுக்குப் பதிலாக தற்போது 450 முதல் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.

தற்போது பரவலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், உடனடியாக லாரி வசதிகளை ஏற்படுத்தித் தேங்கியுள்ள மூட்டைகளைக் குடோனுக்கு எடுத்துச் செல்லவும், நெல் கொள்முதலை விரைவுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்சோ தவிர்த்த பிற வழக்குகளின் எஃப்.ஐ.ஆர்-ஐ ஆன்லைனில் பார்க்கும் வசதி: அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்தது!

MUST READ