Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுக்கு "எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு... விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மனம்...

தமிழ்நாடு அரசுக்கு “எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு… விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மனம் இல்லையா?” விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ. இளங்கீரன் கடும் கண்டனம்!

-

- Advertisement -

சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் வாங்கவும், உதவியாளர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யும் தமிழ்நாடு அரசு, ஏழை விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் எனப் பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ. இளங்கீரன் காட்டமாக வேதனை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசுக்கு "எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு... விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மனம் இல்லையா?" விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ. இளங்கீரன் கடும் கண்டனம்!

இது தொடர்பாகக் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ. இளங்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

we-r-hiring

“ஊரார் வீட்டு நெய்யில் ஸ்வீட்டா?” — முதல்வருக்குக் கேள்வி:
மக்களின் வரிப் பணத்தை இப்படி வீணடிப்பதை நம்முடைய முதலமைச்சரின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘ஊரார் வீட்டு நெய்யில் உங்களுக்குச் ஸ்வீட்டா?’ முதல்வரே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.எல்.ஏ-க்களுக்கான நிதிச் சலுகை:
234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய கார்கள் வாங்கவும், அவர்களின் உதவியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவும் அரசிடம் போதிய நிதி உள்ளது. ஆனால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைக்கும் போதெல்லாம் அரசிடம் நிதி நெருக்கடி இருப்பதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம்?கடும் விமர்சனம்

குடிநீர் மற்றும் பாசன நீர் தட்டுப்பாடு:
மாநிலத்தில் தற்போதும் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், விவசாயம் செய்வதற்குப் போதிய பாசன நீரும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தடுப்பணைகள் கட்டக் கோரிக்கை:
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டினால், ஆண்டிற்கு 20 தடுப்பணைகளை உருவாக்க முடியும்.

பொருளாதார மேம்பாடு:
இவ்வாறு தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். மேலும் மீன்பிடித் தொழில் பெருகி, லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இது மாற்றமல்ல, ஏமாற்றமே!”:
ஆட்சிக்கு வரும் முன் ‘மாற்றம்’ தருவோம் எனக் கூறிய வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய அரசின் நடவடிக்கைகள் மக்களுக்கு எந்தவித நன்மையையும் தரவில்லை என்றும், இது ‘மாற்றம்’ அல்ல; மக்களுக்கு அரசு அளித்துள்ள பெரும் ‘ஏமாற்றமே’ என்றும் தனது அறிக்கையில் கே.வீ. இளங்கீரன் குற்றம் சாட்டியுள்ளார்.

2029 தேர்தல் வரை தவெக கூட்டணியில் எவ்விதச் சிக்கலும் இருக்காது!மூத்த பத்திரிகையாளர் பிரியன் கணிப்பு — நிதியாதாரம், ஊழல் புகார்கள் மற்றும் வாக்கு வங்கி குறித்து சுவாரஸ்ய அலசல்!

MUST READ