Homeசெய்திகள்சென்னைதாம்பரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை - மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது -...

தாம்பரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை – மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது – 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு!

-

- Advertisement -

சென்னை மற்றும் இதர முக்கிய நகரங்களில் உள்ள பிரபல துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் கைவரிசை காட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண் திருடர்களை குரோம்பேட்டை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தாம்பரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை - மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது - 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு!

சம்பவம் நடந்தது எப்படி?
சென்னை பெருங்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டனி ராஜி, கடந்த ஜூலை 23 அன்று தனது குடும்பத்தினருடன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு பட்டுப்புடவைகள் வாங்கச் சென்றுள்ளார். முதல் தளத்தில் புடவைகளைத் தேர்வு செய்துவிட்டு பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றபோது, அவரது தாயாரின் கைப்பையில் இருந்த 50,000 ரூபாய் பணம் மாயமாகியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

we-r-hiring

உடனடியாக அவர் குரோம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட தீவிர சிசிடிவி ஆய்வில், மூன்று பெண்கள் பட்டுப்புடவை வாங்குவது போல் நடித்து, நயவஞ்சகமாக கவனத்தை திசை திருப்பி பணத்தை அபேசு செய்தது தெளிவாகப் பதிவாகியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பல மாநிலங்களில் கைவரிசை – போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின:
 சிக்கிய கும்பல்: கைது செய்யப்பட்டவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு (40), மீனாட்சி (35), மற்றும் லட்சுமி பாய் (40) ஆவர். சிறுவயது முதலே நண்பர்களான இவர்கள் கூட்ட நெரிசலான இடங்களை குறிவைத்து கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

செயல்பாட்டுப் பகுதிகள்: சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பிரபல நகை மற்றும் துணிக்கடைகளே இவர்களின் முக்கிய இலக்காகும்.

வழக்குகள்: இவர்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள்
கடந்த ஜூலை 25 அன்று சென்னை டி.நகர் பகுதியில் உள்ள கடைகளில் கைவரிசை காட்டிய இंந்த கும்பல், ஒருவரிடம் 4 பவுன் நகை, மற்றொருவரிடம் 75,000 ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டை திருடியது குறித்து மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதனிடையே புதுச்சேரியில் கைவரிசை காட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கிய இவர்களிடமிருந்து ரூ. 6.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் டி.நகர் திருட்டுச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, மாம்பலம் போலீசார் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, பெங்களூரு மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களிலும் இவர்கள் மீதுள்ள வழக்குகளின் அடிப்படையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களையும் தனித்தனியாக காவலில் (Custody) எடுத்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி பணத்தையும் நகைகளையும் மீட்டு வருகின்றனர். மற்ற மாநில மற்றும் மாநகர காவல்துறையினரும் இவர்களை கஸ்டடியில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதால், இவர்களின் கூடுதல் குற்றப்பின்னணி விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஓடும் ஆட்டோவில் தொடரும் ரீல்ஸ் மோகம்: உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?

MUST READ