Homeசெய்திகள்இந்தியாகால்நடை மருத்துவர் பரிந்துரை கட்டாயம்: தெரு நாய்கள் கருணைக்கொலை குறித்து கேரள அரசு வெளியிட்ட புதிய...

கால்நடை மருத்துவர் பரிந்துரை கட்டாயம்: தெரு நாய்கள் கருணைக்கொலை குறித்து கேரள அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்!

-

- Advertisement -

கேரள மாநிலத்தில் பொதுமக்களுக்குப் பெரும் அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தி வரும் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட வகை தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.கால்நடை மருத்துவர் பரிந்துரை கட்டாயம்: தெரு நாய்கள் கருணைக்கொலை குறித்து கேரள அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்!

யாருக்கெல்லாம் கருணைக்கொலை?
கேரளாவில் தெரு நாய்களின் கடி மற்றும் வெறிநாய் தாக்குதலால் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, பொதுமக்களுக்குக் கடும் ஆபத்தை விளைவிக்கும் தீவிரமான நாய் கடி நடத்தை கொண்ட நாய்கள் மற்றும் குணப்படுத்த முடியாத மோசமான நோய்களால் அவதிப்பட்டு வரும் தெரு நாய்களை மட்டும் கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

துப்பாக்கியால் சுடவோ, விஷம் வைக்கவோ தடை!
கருணைக்கொலை செய்வதற்கான கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது. நாய்களை விஷம் வைத்துக் கொல்லவோ, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவோ அல்லது சித்திரவதை செய்தோ கொலை செய்யக் கூடாது என்று மாநில அரசு திட்டவட்டமாகத் தடை விதித்துள்ளது.

கால்நடை மருத்துவர் முன்னிலையில் நடைமுறை
அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தகுதிபெற்ற கால்நடை மருத்துவரால் முறைப்படி பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே கருணைக்கொலை செய்யப்பட வேண்டும். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பிரத்யேக மருந்தை, நாயின் நரம்பு வழியாகச் செலுத்தி (Intravenous Injection) வலி இல்லாமல் மட்டுமே கொலை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், விலங்குகள் நலன் மற்றும் மனித பாதுகாப்பைச் சமநிலைப்படுத்தவும் கேரள அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக நாடுகளை வியக்க வைத்த இந்தியாவின் UPI: 10வது ஆண்டில் ரூ. 314 லட்சம் கோடி தொட்டு சாதனை!

MUST READ