spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பு

சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பு

-

- Advertisement -

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டத்தில்  ராசிபுரத்தையடுத்த எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது27).இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி.

விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கமும், கஞ்சா போடும் பழக்கமும் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மது போதையில் வரும் விஜயகுமார் தனது மனைவி ரோகினியிடம்  தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது.

we-r-hiring
சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பு
விஜயகுமார்

இந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் விஜயகுமார் மது போதையில் வீட்டிற்கு வந்து கணவன் மனைவியிடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயகுமாரின்  சித்தப்பா சேட்டு (வயது 60) என்பவர் கணவன் மனைவி இருவரையும் தடுத்து சண்டையிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் பக்கத்தில் இருந்த காய்கறிகள் அரியப்படும் கத்தியால் தன் சொந்த சித்தப்பாக்கூட எனப் பார்க்காமல் மார்பு பகுதி, வயிறு என மூன்று இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்தப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சேட்டுவை அக்கம் பக்கத்தினர் பார்த்து உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் சித்தப்பா சேட்டு என்பவர் பரிதாபக உயிரிழந்தார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மனைவியை அடிக்காதே என்று தடுத்த சொந்த சித்தப்பாவை கொடூரமாக விஜயகுமார் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் ராசிபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ