முதலமைச்சர் தலைமையில் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாகத் தகவல்
உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதனை உலகமே போற்றும் வகையில் தவெக அரசு மிக விமரிசையாக நடத்தும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றிய அமைச்சர் ரமேஷ், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பகோணம் மகாமகம் பெருவிழாவிற்கான ஆயத்தப் பணிகள் குறித்துக் கூறியதாவது:

முதலமைச்சர் தலைமையில் தொடர் ஆய்வுகள் தென்னகத்தின் கும்பமேளா என்று போற்றப்படும் கும்பகோணம் மகாமகம் திருவிழா வரும் 2028-ஆம் ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்குத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து முதலமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் அவ்வப்போது தொடர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
உலகமே வியக்கும் வகையில் ஏற்பாடுகள் கடந்த காலங்களை விடவும் இந்த முறை மகாமகம் திருவிழாவை மிகவும் பிரம்மாண்டமாகவும், உலகமே போற்றி வியக்கும் வகையிலும் நடத்துவதற்குத் தவெக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் ரமேஷ் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; விஜய்க்கு அந்த எண்ணம் கற்பனையிலும் இருக்காது: வைகோ பேட்டி!
