
தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் அனல் மின் நிலையம்:

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது செயல்பட்டு வரும் 1,050 மெகாவாட் திறன் கொண்ட பழமையான 5 அலகுகள் படிப்படியாக மாற்றியமைக்கப்படும். அதற்கு பதிலாக, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில், தலா 800 மெகாவாட் திறன்கொண்ட 2 புதிய அலகுகளுடன், மொத்தம் 1,600 மெகாவாட் திறன் கொண்ட ‘New Supercritical Thermal Power Station’ ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
ரூ.33,066 கோடியில் மின் தொடரமைப்புக் கட்டமைப்பு:
மின் உற்பத்தியை சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்குத் திறம்படக் கொண்டு சேர்க்க “தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” ரூ.33,066 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 15,000 கி.மீ நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படும்.
சென்னையில் ரூ.1,762 கோடியில் மின் விநியோக சீரமைப்பு:
சென்னையில் மழைக்கால வெள்ளப் பாதிப்புகள் மற்றும் கோடைகால அதிக மின்தேவையை எதிர்கொள்ள ரூ.1,762 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 36 புதிய (33/11 KV) துணை மின் நிலையங்கள் அமைத்தல், பழைய கேபிள்கள், மின்மாற்றிகள் மற்றும் Pillar Box உள்ளிட்ட உபகரணங்களை மாற்றி புதிய விநியோகக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
“பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல”: சென்னை மகளிர் கருத்தரங்கில் நடிகை ரேவதி உருக்கம்!
