Homeசெய்திகள்இந்தியா2026-ன் உலகின் சிறந்த இரவுக் கலாச்சார நகரங்கள்: டெல்லி, மும்பையை பின்னுக்குத் தள்ளி பெங்களூரு சாதனை!

2026-ன் உலகின் சிறந்த இரவுக் கலாச்சார நகரங்கள்: டெல்லி, மும்பையை பின்னுக்குத் தள்ளி பெங்களூரு சாதனை!

-

- Advertisement -

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘டைம் அவுட்’ (Time Out) நிறுவனம் மற்றும் ‘இன்ட்ரெபிட் டிராவல்’ அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2026-ம் ஆண்டிற்கான ‘உலகின் சிறந்த 20 இரவுப்பொழுது நகரங்கள்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரு 17-வது இடத்தைப் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளது.

we-r-hiring

டெல்லி, மும்பைக்கு கிடைக்காத இடம்! சர்வதேச அளவில் உணவு மற்றும் கலாச்சாரத்திற்காக பெங்களூரு ஏற்கனவே 13-ம் இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது இரவுக் கலாச்சாரத்திலும் உலக வரைபடத்தில் தடம் பதித்துள்ளது.

இரவுப் பொழுது அமைப்புகளின் தரம், பாதுகாப்பு, செலவு மலிவு, சமூகக் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் சர்வதேச வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி இப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில்:

  • பாரம்பரியமான நைட்கிளப்ஸ்களைத் தாண்டி நேரலை இசை நிகழ்ச்சிகள் (Live Music)

  • நகைச்சுவை மன்றங்கள் (Stand-up Comedy)

  • கிராஃப்ட் பியர் விடுதிகள், பாப் கஃபேக்கள்

ஆகியவற்றின் சிறப்பான பங்களிப்பால் பெங்களூரு 17-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் வர்த்தகத் தலைநகரான மும்பை ஆகிய நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் டாப் 5 இரவுப் பொழுது நகரங்கள்:

  1. பாங்காக் (தாய்லாந்து) – முதலிடம்

  2. பெர்லின் (ஜெர்மனி) – 2-ஆம் இடம்

  3. நியூயார்க் (அமெரிக்கா) – 3-ஆம் இடம்

  4. மெல்போர்ன் (ஆஸ்திரேலியா) – 4-ஆம் இடம்

  5. சாவ் பாலோ (பிரேசில்) – 5-ஆம் இடம்

இந்திய ஜிடிபி 7.8 சதவீதமாக உயர்வு: “மக்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி” – பிரதமர் மோடி பெருமிதம்!

 

MUST READ