spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகினியாவில் இருந்து கடத்தப்பட்ட 1,539 கிராம் போதைப்பொருள் பறிமுதல்!

கினியாவில் இருந்து கடத்தப்பட்ட 1,539 கிராம் போதைப்பொருள் பறிமுதல்!

-

- Advertisement -

 

கினியாவில் இருந்து கடத்தப்பட்ட 1,539 கிராம் போதைப்பொருள் பறிமுதல்!
File Photo

கினியா நாட்டில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த ஆண் பயணி ஒருவரிடம் இருந்து ரூபாய் 1,539 கிராம் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

we-r-hiring

சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!

ஆம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரவிருப்பதாக, விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புலனாய்வு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கினியா நாட்டில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய ஆண் பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரிடம், 1,539 கிராம் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபபா நகர் வழியாக, போதைப்பொருளைக் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

MUST READ