spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

-

- Advertisement -

 

கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
Photo: IPL Official Twitter Page

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் மேலிடத்திற்கு வழங்கி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

we-r-hiring

வங்கக்கடலில் அதி தீவிர புயல் ‘மோகா’!

முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய, பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 135 பேர் பங்கேற்றிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களான மகாராஷ்டிரர் மாநில முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜித்தேந்திரா சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
Photo: Karnataka Congress

கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, தீர்மானத்திற்கு 135 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ