தமிழக சட்டப்பேரவையில் நேற்று பெண் எம்.எல்.ஏ சத்யபாமா மாற்றுத் தலைவராகச் செயல்பட்ட நிலையில், இன்று இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ முஸ்தபா மாற்றுத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சபையை வழிநடத்தினார். இவருக்கு மூத்த உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் பாராட்டு தெரிவித்தார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையைத் திறம்பட நடத்துவதற்காக மாற்றுத் தலைவர்கள் (Panel of Chairpersons) நியமிக்கப்படுவது வழக்கம்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினரான சத்யபாமா மாற்றுத் தலைவராக அமர்ந்து அவைக் நடவடிக்கைகளைச் சிறப்பாகச் சீர்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இன்றைய கூட்டத்தொடரில் சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ முஸ்தபா மாற்றுத் தலைவராகப் பணிபுரிந்து சபையைத் தலைமையேற்று நடத்தினார்.
அவையில் அனைத்துச் சமூகத்தினருக்கும் சம வாய்ப்பும் உரிய முக்கியத்துவமும் அளிக்கப்படுவதை உணர்த்தும் வகையில் மாற்றுத் தலைவர்களாகப் பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுச் செயல்படுவதை,
சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான கே.ஏ. செங்கோட்டையன் மனதாரப் பாராட்டிப் பேசினார்.
