Homeசெய்திகள்சென்னைவிநாயகர் சிலை கரைப்பு: பொதுமக்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

விநாயகர் சிலை கரைப்பு: பொதுமக்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

சென்னை மாவட்டத்தில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது, பொதுமக்கள் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

we-r-hiring

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடமை: தொன்றுதொட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. நீர்நிலைகளான கடல், ஆறு மற்றும் குளங்கள் நமக்குக் குடிநீர் ஆதாரத்தை வழங்கி வருவதால், அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது முக்கியக் கடமையாகும்.

  • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்: விநாயகர் சிலைகளைக் கரைக்கும் போது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளையும் வழிமுறைகளையும் (www.tnpcb.gov.in) பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

  • குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைப்பு: மாவட்ட நிர்வாகத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டு, குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைத்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சென்னை தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்! அரசு ஏற்றுக்கொண்ட 5 முக்கிய கோரிக்கைகள் என்ன?

 

MUST READ