Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நேரில் அழைப்பு!

தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நேரில் அழைப்பு!

-

- Advertisement -

சென்னை அசோக் நகர் விசிக அலுவலகத்தில் சந்திப்பு; அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர்!தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நேரில் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நேரில் அழைப்பு!

we-r-hiring

தொல். திருமாவளவனுக்குத் தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அசோக் நகர் விசிக அலுவலகத்தில் சந்திப்பு:
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குத் தவெக தலைவர்களும், அமைச்சர்களுமான புஸ்ஸி என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் வருகை தந்தனர்.

அங்கு விசிக தலைவர் தொல். திருமாவளவனைச் சந்தித்துப் பேசிய அவர்கள், செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பிதழை வழங்கினர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குத் தொடர் அழைப்பு:
ஏற்கனவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைத் தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பை விடுத்து வரும் நிலையில், தற்போது விசிக தலைவர் திருமாவளவனுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
செப்டம்பர் 9-ல் நடைபெறும் இக்கூட்டத்தில், தவெக அரசின் அடுத்தகட்ட அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்,கூட்டணிக் கட்சிகளிடையேயான ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது, கூட்டணிக்கான பெயரினை முறைப்படி இறுதி செய்வது,உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுடனான பிணைப்பை வலுப்படுத்தத் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், விசிக தலைவருடனான இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தவெக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருடன் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சந்திப்பு

MUST READ