Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 1 வரை...

தமிழகத்தில் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 1 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது!

-

- Advertisement -

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர் பலகைகளைத் தமிழில் வைப்பதை உறுதி செய்ய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 1 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது!

தமிழகத்தில் இயங்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கே முதன்மை இடம் அளிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.

we-r-hiring

இந்த சட்டப்பூர்வ நடைமுறையை அமல்படுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அரசின் இந்த உத்தரவை எதிர்த்தும், பெயர் பலகைகளை மாற்றுவதற்கு கூடுதல் அவகாசம் கோரியும் மும்பையைச் சேர்ந்த ‘இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம்’ (Retailers Association of India) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன்:  “வணிக நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முழுமையாகத் தயாராகவே உள்ளன.

ஆனால், பெயர் பலகைகளின் வடிவமைப்பு, எழுத்துரு (Fonts), வண்ணங்களை மாற்றி புதிய பலகைகளை அமைப்பதற்கு கணிசமான தொகையும் கால அவகாசமும் தேவைப்படுகிறது.

எனவே, பெயர் பலகைகளைத் தமிழில் மாற்ற 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்” என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் கெடு  மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சுரேந்தர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் வருகிற நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளைத் தமிழில் மாற்ற வேண்டும் என இறுதி அவகாசம் அளித்தார்.

குறிப்பிட்ட அவகாசத்திற்குள் தமிழ் பெயர் பலகை வைக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகைகளை மாற்றி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

அக்டோபர் 15-ல் திருச்சியில் இடதுசாரிகளின் மாபெரும் பேரணி: தவெக கூட்டணியில் சேர்வது குறித்துக் குழு கூடி முடிவெடுக்கப்படும் — பெ.சண்முகம் பேட்டி!

MUST READ