தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான் என்பதைத்தான் முதலமைச்சர் நேற்றைய தினம் வெளிப்படுத்தினார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
முதலமைச்சரின் கடமை சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திமுக ஆட்சிக் காலத்தில் என்னென்ன ஊழல்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை உரிய இடத்தில் பதிவு செய்ய வேண்டிய முக்கியப் பொறுப்பில் முதலமைச்சர் இருக்கிறாா்.

அதைத்தான் அவர் தகுந்த ஆதாரங்களுடன் செய்து வருகிறார்” என்று குறிப்பிட்டார்.
திமுக மீது சாடல்தொடர்ந்து காரசாரமாக உரை நிகழ்த்திய அவர், “தமிழக அரசியல் வரலாற்றில் ஊழல் என்ற புற்றுநோயை முதன்முதலில் விதைத்து உருவாக்கியதே திமுகதான்.
இந்த வரலாற்று உண்மையைத்தான் நேற்றைய தினம் சட்டமன்ற உரையின் மூலம் முதலமைச்சர் மக்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளும் தரப்பின் இந்த அதிரடி குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் காரசார விவாதங்களை உருவாக்கியுள்ளது.
