திருநெல்வேலியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ்-2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி சின்னக்குட்டி என்பவருக்கு மரண தண்டனையும், மற்ற இருவருக்கு நீண்டகால சிறை தண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
நம்பிச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்
கடந்த 2022-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் +2 படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு முனீஸ்வரன் என்பவருடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது

முனீஸ்வரனை நம்பிச் சென்ற அந்த மாணவியை, முனீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களான சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
மூன்று பேரும் குற்றவாளிகள் – நீதிபதி தீர்ப்பு
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் முனீஸ்வரன், சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய மூன்று பேருமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரங்கள்:
நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய தண்டனை விவரங்கள் வருமாறு:
சின்னக்குட்டி: முக்கிய குற்றவாளியான சின்னக்குட்டிக்கு தூக்கு தண்டனை (மரண தண்டனை) விதிக்கப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முருகேசன்: 20 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை.
முனீஸ்வரன்: 13 ஆண்டுகள் சிறை தண்டனை.
பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு விரைவாக விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
