Homeசெய்திகள்சினிமாஒரு படம் பொழுது போக்காக இருந்தாலும் பலரின் வாழ்வாதாரம், கனவு - 'சர்தார் 2' செய்தியாளர்கள்...

ஒரு படம் பொழுது போக்காக இருந்தாலும் பலரின் வாழ்வாதாரம், கனவு – ‘சர்தார் 2’ செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

-

- Advertisement -

ஒரு திரைப்படம் பொழுதுபோக்காக இருந்தாலும், அது ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் அவர்களின் கனவாகவும் இருக்கிறது என்று ‘சர்தார் 2’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.ஒரு படம் பொழுது போக்காக இருந்தாலும் பலரின் வாழ்வாதாரம், கனவு - 'சர்தார் 2' செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

நாளை திரைக்கு வரும் ‘சர்தார் 2’- பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

we-r-hiring

பிளாஸ்டிக் பாட்டிலை நினைவூட்டிய எஸ்.ஜே.சூர்யா- நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி:
சர்தார் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும், நல்ல செய்தியைச் சொல்லும் படமாகவும் அமைந்தது. இயக்குநர் மித்ரன் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருந்தார். அதனை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

தற்போது ‘சர்தார் 2’ படத்தின் விளம்பர நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா, பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரைப் பார்த்து கேள்வி எழுப்பி முதல் பாகத்தை நினைவூட்டியுள்ளார்.

இந்தப் படம் முதல் பாகத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளை இணைக்கும் கதைக் களமாகக் (Prequel & Sequel) இருக்கும்.”

ஹாலிவுட் தரத்திலான முயற்சி – தொடர்ந்து பேசிய அவர், “ஆங்கிலப் படங்களைப் பார்க்கும்போது நாமும் எப்போது இதுபோன்ற கதைகளில் முயற்சிக்கப் போகிறோம் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசைக்கு மிக நெருக்கமான ஒரு முயற்சியாகச் ‘சர்தார் 2’ படத்தை உருவாக்கியுள்ளோம்.

இயக்குநர் மித்ரன் அற்புதமான உழைப்பைக் கொடுத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் (Post-production) பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அபாரமான உழைப்பைச் செலுத்தியுள்ளனர்.

சாம் சி.எஸ்-ன் 100-வது படம் – கைதி திரைப்படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளேன். இது அவரது 100-வது திரைப்படம் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஒவ்வொரு திரைப்படமும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுக்கிறது. அதற்கு அர்ப்பணிப்பும் உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.

அந்த வகையில் இந்த படத்தில் இரவு பகலாக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களின் குடும்பத்தினருக்குத் தான் நான் முதலின் நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது பலரின் வாழ்வாதாரமாகவும் கனவாகவும் இருக்கிறது,” என கார்த்தி தெரிவித்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்!

MUST READ