Homeசெய்திகள்சினிமா"திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!" - நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!

“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!

-

- Advertisement -

திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர் நபீலா ஜமால் உடனான நேர்காணலில் காதல் மற்றும் திருமண பந்தம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

we-r-hiring

திருமணம் குறித்த கருத்துக்கள்:

அப்போது பேசிய ரம்யா, ‘வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு முக்கியமான ஒன்றா என்றால் நிச்சயமாக இல்லை. நமது அடையாளத்தை திருமணம் தீர்மானிப்பது கிடையாது. திருமணம் இன்றியே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். நீங்கள் திருமண பந்தத்தில் இணையப் போகிறீர்களா அல்லது மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

சரியான துணை குறித்து விளக்கம்:

மேலும் தான் திருமணத்திற்கு எதிரானவர் அல்ல என்று விளக்கம் அளித்த ரம்யா, ‘பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தோழனாக இருக்கும் சரியான நபர் கிடைத்தால் திருமணம் என்பது அழகான ஒன்றுதான்.

எனது சொந்த வாழ்க்கையை பொருத்தமட்டில், எனக்கேற்ற சரியான துணை இதுவரை அமையவில்லை, நானும் தீவிரமாக தேடவில்லை. எனது தொழில் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தி வருவதால் புதிய உறவுகளுக்கு தற்போது நேரமில்லை’ என்று கூறினார். நடிகை ரம்யாவின் இந்த துணிச்சலான கருத்து சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

ஒரு படம் பொழுது போக்காக இருந்தாலும் பலரின் வாழ்வாதாரம், கனவு – ‘சர்தார் 2’ செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

MUST READ