தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை பிரியங்கா மோகன், முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகித் தனது திரைப்பயணத்தில் புதிய உச்சத்தைத்தொட்டுள்ளார்.
‘டாக்டர்’, ‘டான்’ போன்ற அடுத்தடுத்த வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பிரியங்கா மோகன், தற்போது தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட மற்றும் மதிப்புமிக்க இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தேர்வாகியுள்ளார்.

வெற்றிமாறன், மாரி செல்வராஜுடன் கூட்டணி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதேபோல், சமூகக் கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்யும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திலும் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கவினுக்கு ஜோடியாக புதிய படம்
இது தவிர, இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும், முன்னணி இளம் நடிகரான கவினுக்கு ஜோடியாக மற்றொரு திரைப்படத்திலும் நடிக்கப் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஒரே ஆண்டில் தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் இளம் திறமைமிக்க 4 முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக வலம் வரவுள்ளது, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!
