spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்!

மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்!

-

- Advertisement -

 

மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்!
File Photo

சென்னை மாநகராட்சியில் வெளிப்படையான நிர்வாகத்தைப் பின்பற்றி, கள ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

“கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தமிழக கூட்டுறவுத்துறைச் செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக மாற்றப்பட்டு நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநகராட்சியின் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக இருந்த காலக்கட்டத்தில், டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையராக பணியாற்றியவர்.

பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், “வெளிப்படையான நிர்வாகத்தைப் பின்பற்றி, கள ஆய்வுக்கு முக்கியத்துவம் தரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்

கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி மக்களின் நற்பெயரைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ