Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி விஜய்யைச் சும்மா விடக்கூடாது!- திமுகவின் சிறுபான்மை நலன் துணைத்தலைவர் வழக்கறிஞர் அலிமீல் புகாரி அதிரடி...

இனி விஜய்யைச் சும்மா விடக்கூடாது!- திமுகவின் சிறுபான்மை நலன் துணைத்தலைவர் வழக்கறிஞர் அலிமீல் புகாரி அதிரடி பேட்டி!

-

- Advertisement -

சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும் முதல்வருமான விஜய் நடந்துகொண்ட விதம் மற்றும் அவருடைய சமீபத்திய உடல்மொழி குறித்த விளக்க அறிக்கை ஆகியவை தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.இனி விஜய்யைச் சும்மா விடக்கூடாது!- திமுகவின் சிறுபான்மை நலன் துணைத்தலைவர் வழக்கறிஞர் அலிமீல் புகாரி அதிரடி பேட்டி!

இதுகுறித்து ‘லிபர்ட்டி தமிழ்’ (Liberty Tamil) ஊடகத்திற்கு திமுகவின் சிறுபான்மை நலன் துணைத்தலைவர் வழக்கறிஞர் அலிமீல் புகாரி அளித்த

we-r-hiring

சட்டமன்றத்தில் விஜய்யின் செயல்பாடு மற்றும் ‘எதேச்சை’ விளக்கம் பொய்யானது! சட்டமன்றத்தில் காவல் துறை மானியக் கோரிக்கையின் போது தவெக தலைவர் விஜய் காட்டிய உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது அல்ல என்றும், அது திட்டமிட்டு முன்கூட்டியே செய்யப்பட்ட ஒரு செயல் என்றும் அலிமீல் புகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தும் உள்நோக்கம் இல்லை; எதேச்சையாக வெளிப்பட்ட உடல்மொழிதான் அது என்று விஜய் வெளியிட்ட அறிக்கை, அவர் ஒரு நேர்மையற்றவர் என்பதையும், மகா பொய்யர் என்பதையும் அம்பலப்படுத்துகிறது.

தவறை உண்மையிலேயே உணர்ந்திருந்தால் அவர் முறைப்படி வருத்தமோ அல்லது மன்னிப்போ கோரியிருக்க வேண்டும்; அதை விடுத்து ‘அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருப்பது அடிப்படை அரசியல் நாகரிகமற்ற செயல் என்றும் அவர் சாடினார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தியாகத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு!
மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகள் மற்றும் தியாகங்களை இழிவுபடுத்தும் நோக்கில் விஜய் செயல்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அலிமீல் புகாரி, 1976-ஆம் ஆண்டு ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி. லட்சுமணன் ஆற்றிய உரையின் அதிகாரப்பூர்வ பதிவுகளிலேயே மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தெளிவாகப் பதிவாகியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில் திருமணமான நிலையில், 10 நாட்களாகத் தன் மனைவியைக் கூடச் சந்திக்க முடியாமல் சிறையில் சொல்லொணா கொடுமைகளை அனுபவித்த ஒரு தலைவரின் தியாகத்தை, விஜய் எதேச்சையாகக் கேலி செய்ததாகக் கூறுவதை மக்கள், குறிப்பாகத் தாய்மார்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

தவெக அரசின் மீதான மக்கள் அதிருப்தி!
ஆட்சிக்கு வந்த மிகக்குறுகிய காலத்தில் (சுமார் 120 நாட்களில்) இவ்வளவு வேகமாகக் மக்களிடம் நற்பெயரை இழந்து அன்-பாப்புலர் (Unpopular) ஆன ஒரு அரசு இந்திய அரசியல் வரலாற்றிலேயே கிடையாது என்று அலிமீல் புகாரி சாடினார்.

‘காட்டு காட்டு’ என்று மக்கள் சட்ட ஒழுங்கை நிலைநாட்டச் சொன்னார்களே தவிர, மன்றத்தில் இதுபோன்ற அநாகரிகமான சர்க்கஸ் கூத்துக்களை நடத்தச் சொல்லவில்லை என்றும், பெண்களுக்கான பாதுகாப்பையோ, சட்ட ஒழுங்கையோ சீர்படுத்தாமல் வெறும் பேச்சிலேயே காலத்தைக் கடத்தி வருவதாகவும் தவெக அரசை விமர்சித்தார்.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம்!
வரவிருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், விஜய்யின் ஆணவத்திற்கும் அகம்பாவத்திற்கும் மக்கள் தரும் சரியான பதிலடியாக அமையும் என்று அவர் பிரகடனப்படுத்தினார்.

கடந்த தேர்தலில் திமுக, அதிமுக-பாஜக கூட்டணியை மட்டுமே மையப்படுத்திப் போட்டியிட்டது.

ஆனால், இந்த இடைத்தேர்தலில் திமுகவின் முழு இலக்கும் விஜய்யையும், அவருடைய தமிழ் மண்ணிற்கு லாயக்கற்ற அநாகரிகக் கட்சியையும் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவதுதான் என்றும், என்ன விலை கொடுத்தேனும் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தவெக-வை மக்கள் மன்றத்தில் துடைத்தெறிவோம் என்றும் வழக்கறிஞர் அலிமீல் புகாரி உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது: விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடும் தாக்கு!

MUST READ