Homeசெய்திகள்தமிழ்நாடு“லண்டன் பயணத்தில் இவ்வளவு ரகசியம் ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு தராசு ஷ்யாம் கேள்வி!

“லண்டன் பயணத்தில் இவ்வளவு ரகசியம் ஏன்?” – முதலமைச்சர் விஜய்க்கு தராசு ஷ்யாம் கேள்வி!

-

- Advertisement -

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிலவரங்கள், தவெக ஆட்சியின் நகர்வுகள் மற்றும் தேசிய அளவிலான அரசியல் சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான முனைவர் தராசு ஷ்யாம் ஊடக நேர்காணல் ஒன்றில் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.“லண்டன் பயணத்தில் இவ்வளவு ரகசியம் ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு தராசு ஷ்யாம் கேள்வி!

மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனுக்கு வரவேற்பு
“மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றி பெற வேண்டும் என நான் உளமாற விரும்புகிறேன். அவர் வழக்கறிஞராகவும் மனித உரிமைப் பணிகளிலும் தொடர்ந்து சிறந்து விளங்கியவர். எழும்பூர் தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்று உழைத்த அனுபவம் கொண்ட பரந்தாமன், மதுராந்தகம் தொகுதிக்குச் சிறந்த எம்.எல்.ஏ-வாகச் செயல்படும் அத்தனை தகுதிகளையும் படைத்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.”

தேசிய அளவில் விஜய் பற்றிய பிம்பமும் பின்னடைவும்
“அகில இந்திய அளவில் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராகக் காட்டும் பிரசாரத்தை அவரது ஆதரவாளர்களே உருவாக்கி வருகின்றனர். வடமாநில சமூக ஊடக ரீல்ஸ்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பது போல ஒரு போலி பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசியலின் முதன்மைத் தூண்களான மாநில உரிமை, இருமொழி கொள்கை, சமூக நீதி போன்றவை வட இந்தியாவில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படாது. சமூக நீதிக்கு எதிரான போக்கு நிலவும் வட மாநில சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படிப் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட முடியும்? இத்தகைய போக்கினால் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேசிய அளவில் தவெகவுடன் முரண்படக்கூடிய சூழல் உருவாகும்.”“லண்டன் பயணத்தில் இவ்வளவு ரகசியம் ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு தராசு ஷ்யாம் கேள்வி!

இடைத்தேர்தல் முடிவுகளும் கூட்டணி தாக்கமும்
“பொதுவாக இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிக்குச் சாதகமான அம்சம் இருக்கும் என்றாலும், ஆளுங்கட்சிகள் தோல்வியடைந்த வரலாறும் தமிழகத்தில் உண்டு. உதாரணமாக, பீகார் இடைத்தேர்தலில் ஆளும் பாஜக – ஜேடியூ கூட்டணி பலமாக இருந்தபோதிலும், பிரசாந்த் கிஷோரின் வேட்பாளர் வெற்றி பெற்றதைக் குறிப்பிடலாம்.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றால் மட்டுமே விஜய்யின் தலைமையை மற்ற கட்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும். மாறாக, குறைந்த வாக்கு வித்தியாசத்திலோ அல்லது தோல்வியையோ சந்தித்தால், வரவிருக்கும் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும். மேலும், கூட்டணி அமைந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான விஜய்யே வெளிப்படையாக அறிவிக்காமல், பிற தலைவர்கள் அறிவிப்பது என்ன மாதிரியான நடைமுறை என்று புரியவில்லை.”

முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து விமர்சனம்
“முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து அரசு தரப்பில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை. ஐரோப்பாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சூழலில், அங்கு சென்று என்ன முதலீடுகளை ஈர்க்கப் போகிறார்கள்? எந்தெந்த நிறுவனங்களைச் சந்திக்கப் போகிறார்கள்? என்கிற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது பெரும் கேள்விகளை எழுப்புகிறது” என்று தராசு ஷ்யாம் தனது பேட்டியில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

MUST READ