
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (மே 17) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்
இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., உள்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா இ.ஆ.ப., காவல்துறைத் தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., காவல்துறைக் கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கி.சங்கர் இ.கா.ப. மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் உயர் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் நியமிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் எரிச்சாராயம், மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும். மெத்தனாலை விஷச் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தாமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.
மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வாட்ஸ் அப் மூலம் பெறும் புகார்களைக் கண்காணித்து எடுக்கும் தொடர் நடவடிக்கைகளை உறுதிச் செய்ய வேண்டும்.
சமீபத்திய புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது காதலனை மறைமுகமாக வெளியிட்டாரா?
எடுத்த நடவடிக்கைகள் குறித்து திங்கள்கிழமை தோறும் முதலமைச்சரின் அலுவகலகத்திற்கு அறிக்கைத் தர வேண்டும். கள்ளச்சாராயம் குறித்து வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.