Homeசெய்திகள்இந்தியாஜனநாயகப் படுகொலையா? தேர்தல் ஆணையத்தின் முகமூடியைக் கிழிக்கும் திடுக்கிடும் உண்மைகள்! — இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட...

ஜனநாயகப் படுகொலையா? தேர்தல் ஆணையத்தின் முகமூடியைக் கிழிக்கும் திடுக்கிடும் உண்மைகள்! — இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அதிரடி ஆதாரம்!

-

- Advertisement -

இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில், தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தில், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான எஸ்.ஒய். சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தங்களது எதிர்ப்புகளையும் மாறுபட்ட கருத்துகளையும் பதிவு செய்துள்ளதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

 

இந்த விவகாரம் குறித்து மனித உரிமை ஆர்வலரும், ‘சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ்’ (CJP) அமைப்பின் செயலாளருமான தீஸ்தா சீதல்வாத் அவர்கள் அளித்துள்ள பேட்டியில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அம்பலமான முறைகேடுகளும் அதிர்ச்சித் தகவல்களும்:

தேர்தல் ஆணையத்தில் பிளவு: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகள் தொடர்பாக, சக தேர்தல் ஆணையர்களான எஸ்.ஒய். சந்து (S.Y. Sandhu) மற்றும் விவேக் ஜோஷி (Vivek Joshi) ஆகியோர் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் உள்நிலை முடிவெடுப்பு நடைமுறை மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து இதன் மூலம் கேள்விகள் எழுந்துள்ளன.

மறைமுகக் கரைகளின் ஆதிக்கம்: தேர்தல் தரவுகள் மற்றும் வாக்காளர் பட்டியல்களைக் கையாளும் மென்பொருட்கள் தொடர்பான அதிகாரங்கள் மையப்படுத்தப்படுவது குறித்து இரண்டு தேர்தல் ஆணையர்களும் கேள்வி எழுப்பியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான அதிகாரிகளின் அணுகல் மற்றும் வாக்காளர் தரவுத்தளத்தின் கட்டுப்பாடு தொடர்பாகவும் கருத்து வேறுபாடுகள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கம் – ஒரு திட்டமிட்ட சதி: வாக்காளர் பட்டியலில் ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ (Logical Discrepancies) எனக் குறிப்பிடப்படும் பிரிவின் அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளின் போது பெயர்கள் நீக்கப்படுவது தொடர்பாக வெளிப்படைத்தன்மை குறித்த விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்காளர் பெயர் நீக்கத்திற்கான காரணங்களை வெளிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்திலும் விவகாரம் தொடர்பாக மனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தருணம்:

தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தேர்தல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு தெளிவாக வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் மௌனம் மற்றும் சட்டப் போராட்டம்: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கைகளும் நீதிமன்றங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை மணி: தேர்தல் ஆணையத்தின் உள்நிலை கருத்து வேறுபாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, அதிகாரப் பகிர்வு மற்றும் வாக்காளர் பட்டியல் நிர்வாகம் குறித்து புதிய விவாதம் உருவாகியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், உள்நிலை குறிப்புகள் மற்றும் மாறுபட்ட கருத்துகள் எந்தவொரு நிறுவனத்திலும் நடைபெறும் வழக்கமான முடிவெடுப்பு செயல்முறையின் ஒரு பகுதி என்றும், கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகள் என்றும் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர்களின் முரண்பாட்டால் வெளிவந்த மோசடி : எஸ்.ஐ.ஆர் (SIR) மூலம் 18 கோடி வாக்குரிமைப் பறிப்பு!

MUST READ