Homeசெய்திகள்அரசியல்கூட்டமே வராதுன்னு நெனச்சாங்க, ஆனா மாநாடு மாதிரி கூடிடுச்சு - மதுராந்தகத்தில் த.வெ.க. வெற்றி வாய்ப்பு...

கூட்டமே வராதுன்னு நெனச்சாங்க, ஆனா மாநாடு மாதிரி கூடிடுச்சு – மதுராந்தகத்தில் த.வெ.க. வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

-

- Advertisement -

முதலமைச்சர் விஜய்யின் ‘ரோடுஷோ’ மற்றும் பொதுக்கூட்டத்தில் அலைகடலெனத் திரண்ட தொண்டர்கள்: எதிராளிகளை உலுக்கிய மக்கள் ஆதரவு!கூட்டமே வராதுன்னு நெனச்சாங்க, ஆனா மாநாடு மாதிரி கூடிடுச்சு - மதுராந்தகத்தில் த.வெ.க. வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த முதலமைச்சர் விஜய்யைப் பார்க்கவும், அவரது உரையை கேட்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் அலைகடலெனத் திரண்டுள்ள சம்பவம், எதிர்க்கட்சிகளின் கணக்குகளைத் தவிடு பொடியாக்கியுள்ளது.

we-r-hiring

மாநாடு போலக் காட்சியளித்த பிரச்சாரக் களம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதலமைச்சர் விஜய்யின் வருகையைக் கேலி செய்து, “ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை, கூட்டம் கூட வராது” என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வந்தனர்.

ஆனால், அச்சிறுப்பாக்கம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மைதானத்திலும், அவர் பயணித்த ரோடுஷோ வழித்தடங்கள் முழுவதிலும் ஊரே திரண்டு வந்தது போல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பிரம்மாண்ட மாநில மாநாட்டை நினைவூட்டும் வகையில் அமைந்த இந்தக் கூட்டம், அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் நம்பிக்கைகூட்டத்தில் பங்கேற்ற உள்ளூர்வாசிகளும், த.வெ.க. தொண்டர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது:

பிரகாசமான வெற்றி வாய்ப்பு: ஆரம்பத்துல இருந்து எதிர்க்கட்சிகள் தேவையில்லாத வதந்த பரப்பிக்கிட்டு இருந்தாங்க. ஆனா இப்போ மைதானத்துல கூடி இருக்குற இந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியும், மதுராந்தகத்துல த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களின் வெற்றி எந்தளவுக்குப் பிரகாசமா இருக்குன்னு!

மக்கள் செல்வாக்கு: “எந்தவிதக் கட்டாயமும் இல்லாமல், முதலமைச்சர் விஜய்யின் நேர்மையான ஆட்சியையும், மக்கள் நலத் திட்டங்களையும் பார்த்துத் தாங்களாகவே குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்த மக்கள் கூட்டம் இது.

இந்த மாபெரும் ஆதரவே இடைத்தேர்தலின் முடிவை இப்போதே உரக்கச் சொல்கிறது” என்று உற்சாகத்துடன் கூறினர். அரசியல் களத்தில் புதிய திருப்புமுனை மதுராந்தகம் தொகுதியைத் தங்களது கோட்டை என்று உரிமை கோரி வந்த எதிர்க்கட்சிகளுக்கு, முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடிப் பிரச்சாரமும், அதில் திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளமும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுராந்தகத்தில் த.வெ.க.வின் கை ஓங்கியிருப்பதை இந்த பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுராந்தகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!

MUST READ