Homeசெய்திகள்அரசியல்சத்தியபாமா ராஜினாமா செய்யலனா நாங்க ஏன் இங்க வரப்போறோம்?" — திருப்பூர் விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர்கள்...

சத்தியபாமா ராஜினாமா செய்யலனா நாங்க ஏன் இங்க வரப்போறோம்?” — திருப்பூர் விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் அதிரடி!

-

- Advertisement -

உயர்மின் கோபுரம், கறிக்கோழி பண்ணை பாதிப்பு விவகாரத்தில் நேரில் பேச்சுவார்த்தை: தவெக ஆட்சியில் திருப்பூர் வறட்சிக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி!சத்தியபாமா ராஜினாமா செய்யலனா நாங்க ஏன் இங்க வரப்போறோம்?" — திருப்பூர் விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் அதிரடி!திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இச்சிப்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியால் விவசாயிகள் மற்றும் கறிக்கோழி பண்ணை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, ‘தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்’ சார்பில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. தகவல் அறிந்தவுடன் அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அருண் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விவசாயிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாற்று வழி மற்றும் கூலி உயர்வு பரிசீலிக்கப்படும் – அமைச்சர் அருண் ராஜ்
விவசாயிகள் மத்தியில் அமைச்சர் அருண் ராஜ் பேசியதாவது:

we-r-hiring

நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். முதலமைச்சர் விஜய் அவர்கள் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். உயர்மின் கோபுரங்களுக்குப் பதிலாக மாற்று வழி அல்லது நிலத்தடி புதைவடமாக (Underground Cable) மின்சாரத்தைக் கொண்டு செல்வது குறித்துப் பேசப்பட்டுள்ளது.

அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்குக் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது; அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனைமலை – நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதே இந்தப் பகுதியின் நீர் ஆதாரத்திற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். தெருநாய்கள் கடித்து ஆடு மாடுகள் உயிரிழந்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விரைவில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும்,” என்றார்.

தொடர்ந்து தவெக அரசு குறித்துப் பேசிய அவர், “வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தைக் கொடுக்கவே அரசு விரும்புகிறது. வெளிப்படைத்தன்மை இருந்தால் தான் தொழில் வளர்ச்சியும் எதிர்கால தலைமுறையின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் தவெக பக்கமே நிற்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

மிரட்டி காரியத்தை நிறுத்த அரசு முயலக்கூடாது — அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்:

சத்தியபாமா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் நாங்கள் ஏன் உங்களைத் தேடி இங்கு வரப் போகிறோம்? உங்கள் கோரிக்கையைச் சொல்ல நீங்கள் கோட்டைக்குத் தான் வரவேண்டி இருந்திருக்கும்.

30 ஆண்டுகால நிலப் பிரச்சினையை 4 மாதங்களில் முடித்து வைக்கிறோம். மிரட்டி ஒரு காரியத்தை நிறுத்த அரசு முயற்சிக்கக் கூடாது; மக்கள் புரட்சி என்பது மிகப்பெரியது. அதனால் தான் நாங்கள் நேரடியாக இங்கு வந்தோம்.

அதிக காற்று வீசுவதால் மழை மேகங்கள் கலைந்து வறட்சி ஏற்படுகிறது. இந்த வறட்சிக்கு எங்கள் தளபதி விஜய் அவர்களால் விரைவில் தொழில்நுட்பக் குழு (Technical Team) அமைக்கப்பட்டுத் தீர்வு காணப்படும். அமராவதியில் இருந்து தண்ணீர் கொண்டுவர ₹250 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

தென்னை மரத்திற்குக் கூட வெளியிலிருந்து தண்ணீர் வாங்கி ஊற்றும் நிலையை இங்கே காண்கிறேன். இதற்கெல்லாம் விரைவில் தீர்வு எட்டப்படும். வரவிருக்கும் இடைத்தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு எங்கள் தளபதிக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைய வேண்டும்,” எனப் பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு: அரசியல் புகார்களுக்கு அதிரடி பதிலடி!
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அருண் ராஜ் அளித்த பேட்டி:

அமைச்சர் செங்கோட்டையன்:  கறிக்கோழி வளர்ப்புக்கு கர்நாடகாவில் கிலோவிற்கு ₹10 வழங்கப்படும் நிலையில், இங்கு ₹6.50 மட்டுமே வழங்கி வந்த நிலை மாற நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 30-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தவெகவை வலுப்படுத்தவே சத்தியபாமா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு வாக்களித்ததே, அதிமுக திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதற்கான தெளிவான சான்று.

அமைச்சர் அருண் ராஜ்: மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் யாரும் எடப்பாடி பழனிசாமியுடன் இல்லை. புதுச்சேரி சென்றது ஏன் என்று எடப்பாடியிடம் கேள்வி கேளுங்கள். திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட அதிமுக, இன்று அவர்களுக்குத் துரோகம் செய்து திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்துள்ளது, என்று சாடினார்.

அமைச்சர்களின் நேரடித் தலையீடு மற்றும் வாக்குறுதிகளைத் தொடர்ந்து, தாராபுரம் பகுதியில் நிலவி வந்த பரபரப்பான சூழல் தணிந்தது.

மதுராந்தகம் இடைத்தேர்தல்: வரும் 26, 27-ஆம் தேதிகளில் சீமான் தீவிரப் பிரச்சாரம்!நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்துத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார்!

MUST READ