தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.


முதல்வர் விஜயை காண்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த நர்சிங் மாணவி கனிமலர் தனது பாட்டியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். முதல்வர் விஜயை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 8 மணியிலிருந்து அவர் அங்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்த நிலையில், வெயில் தாக்கம் காரணமாக நர்சிங் மாணவி கனிமலர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட அருகிலிருந்தவர்கள், அவரை தூக்கி நிழல் பகுதிக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். பின்னர் அவருக்கு குடிநீர் வழங்கி ஆறுதல் அளித்ததுடன், மிட்டாய் வழங்கி ஆசுவாசப்படுத்தினர்.
முதல்வர் விஜயை காண்பதற்காக நீண்ட நேரமாக காத்திருந்த நர்சிங் மாணவி வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
