நெல்லையில் 13 வயதுக்குட்பட்ட 4 சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதபோதகர் ஆபிரகாமுக்கு விதிக்கப்பட்ட 4 தூக்கு தண்டனைகளை உறுதி செய்யக் கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், குற்றவாளியை சிறையில் இருந்து காணொலி வாயிலாக ஆஜர்படுத்த மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 சிறுமியருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு

2020 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 13 வயதுக்குட்பட்ட 4 சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆபிரகாம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி ஆபிரகாமுக்கு 4 தனித்தனி தூக்கு தண்டனைகளை விதித்து உத்தரவிட்டது.
தண்டனையை உறுதி செய்யக் கோரி மனு
போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி காவல்துறை தரப்பில் மதுரை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தூக்கு தண்டனை தொடர்பான வழக்கு என்பதால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்ற அமர்வு பரிசீலித்து அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலையில், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அக்டோபர் 13ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜர்
இந்த வழக்கை நீதிபதிகள் நிர்மல்குமார், குணசேகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, குற்றவாளி ஆபிரகாமை வரும் அக்டோபர் 13ஆம் தேதி சிறையில் இருந்து காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அன்றைய தினம் ஆபிரகாம் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.
குளித்தலை அருகே மூதாட்டி கொடூரக் கொலை: விவசாயத் தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் சடலம்
