spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneral8 குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு பெற்றோர் நாடகம்

8 குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு பெற்றோர் நாடகம்

-

- Advertisement -

கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு குழந்தை காணாமல் போனதாக போலீசாரிடம் நாடகம் ஆடிய தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் தனலட்சுமி தம்பதியினர் இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தனலட்சுமி கடந்த 12-ம்தேதி தனது குழந்தையுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.அப்போது கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் சென்ற அவர் அங்கு பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் அருகில் குழந்தையை வைத்து விட்டு தனலட்சுமி கழிவறைக்கு சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை எனவும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

we-r-hiring

புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் இது குறித்து குழந்தையின் தாய் தனலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்பொழுது தனலட்சுமி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தனலட்சுமி குழந்தையை கொண்டு வருவதும் அப்பொழுது ஒரு பெண்மணி தனலட்சுமி இடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்டு செல்வதும் சிசிடிவி காட்சிகளில் பதிவானது. பின்னர் இதுகுறித்து தனலட்சுமி இடம் போலீசார் விசாரணையில் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக ஒப்புக்கொண்டார். அதில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் உதயா(37), சுமதி(32) தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுமதி தனது முகநூல் பக்கத்தில் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனவும் தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க இருப்பதாகவும் கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த தனலட்சுமி தனது குழந்தையின் புகைப்படத்தை உதயா,சுமதி தம்பதியினருக்கு அனுப்பி விற்பதாக அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.பின்னர் இரு தரப்பினரிடம் குழந்தை 25 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டது. இதனை அடுத்து கடந்த 12-ம் தேதி சுமதியை கிருஷ்ணகிரி வரவழைத்த தனலட்சுமி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தை ஒப்படைத்துவிட்டு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு சென்று உள்ளார். ஆனால் மறுநாள் தனலட்சுமி தனது குழந்தை பற்றி நலம் விசாரிக்க சுமதியை தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போனில் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. பின்னர் தனது குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக போலீசாரிடம் உண்மையை தெரிவிக்க பயந்து தனலட்சுமி தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாய் தனலட்சுமி குழந்தையை வாங்கிய சுமதி, உதயா ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் மேலும் இது தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் கிருஷ்ணகிரி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ