Homeசெய்திகள்வானிலைவங்கக்கடலில் தீவிரமடையும் 'முரசு' புயல்: வட தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

வங்கக்கடலில் தீவிரமடையும் ‘முரசு’ புயல்: வட தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

-

- Advertisement -

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ புயல் மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ‘ரெட் அலர்ட்’ (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிரமடைந்து வரும் ‘முரசு’ புயல், வரும் நவம்பர் 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆந்திர மாநிலத்தின் பாபட்லா – காவாலி (ஓங்கோல் அருகே) பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

we-r-hiring

புயல் கரையை கடக்கும் சமயத்திலும், அதற்கு முன்னதாகவும் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் மணிக்கு 120 கி.மீ வேகம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடல் கொந்தளிப்புடனும், காற்று மிகக் கடுமையான வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையும் வானிலை மையமும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளன.

வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

MUST READ