Homeசெய்திகள்இந்தியாமோடி - அமித்ஷா ஆட்சி முடிவுக்கு வருகிறது? டெல்லியை உலுக்கிய  ‘வாக்குத் திருட்டு’ பூகம்பம்! எதிர்க்கட்சிகள்...

மோடி – அமித்ஷா ஆட்சி முடிவுக்கு வருகிறது? டெல்லியை உலுக்கிய  ‘வாக்குத் திருட்டு’ பூகம்பம்! எதிர்க்கட்சிகள் இம்பீச்மெண்ட் அதிரடி!

-

- Advertisement -

Modi-Amit Shah - Rahul Gandhiதேசிய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய ஆளும் பாஜக அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. வாக்குத் திருட்டு விவகாரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடுத்துள்ள அதிரடித் தாக்குதல், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

“2029 வரை காத்திருக்கத் தேவையில்லை!” – கே.சி.வேணுகோபால் அதிரடி முழக்கம்!”
“2029 பாராளுமன்றத் தேர்தல் வரை அமித்ஷாவும் மோடியும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை; வெகுவிரைவிலேயே அவர்கள் இருவரும் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள்!” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களைத் திரட்டி, டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் மாபெரும் போராட்டத்தை இந்தியா கூட்டணி நடத்தியதை பார்த்து மத்திய அரசுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தேர்தல் ஆணையருக்கு எதிராக இம்பீச்மென்ட்! – எதிர்க்கட்சிகளின் ‘செக்’!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் திரண்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் நேகா போரா ஆகியோர், தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மாதிரி நாடாளுமன்றத்தில்’இம்பீச்மென்ட்’ (Impeachment) தீர்மானம் கொண்டுவந்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியை தந்துள்ளனர்.

“நீங்கள் வசந்தத்தைத் தடுக்க முடியாது; இந்த அறவழிப் போராட்டம் பாஜகவின் சர்வாதிகாரத்தை வீழ்த்தும்” என நேகா போரா கொந்தளித்துள்ளார்.

vote theft

தோல்விப் பயத்தில் அமித்ஷா? விவாதத்திற்கு அழைத்து சரணடையும் சூழல்!

மறுபுறம் உத்தரப் பிரதேசத்தில் பேசிய அமித்ஷா, “துணிச்சலிருந்தால் வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தி எங்களோடு விவாதிக்க வரட்டும்” என்று பேசியுள்ளார. ஆனால், ராகுல்காந்தி ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது வாய் திறக்காத மத்திய அரசு, தொடர் போராட்டங்களைக் கண்டு பயந்துபோயே தற்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆட்சிக் கட்டிலுக்கு ஆபத்து? ஓயாத மக்கள் போராட்டம்!

உத்தரப் பிரதேச எம்.எல்.சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் ஆளுங்கட்சிக்குக் கிடைத்த பின்னடைவுகளும், வாக்கு இயந்திரங்கள் மீதான மக்களின் நம்பிக்கையின்மையும் பாஜகவின் வாக்கு வங்கியைப் பெரிதும் பாதித்துள்ளன.

வாக்கு இயந்திரங்களும் தேர்தல் ஆணையமும்தான் தங்களைக் காப்பாற்றுகின்றன என்ற உண்மை வெளிப்பட்டுவிட்டதாகவும், மோடி-அமித்ஷா கூட்டணி பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

MUST READ