Homeசெய்திகள்சினிமாசண்முக பாண்டியனின் 'வாணவேடிக்கை'.... ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு!

சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை’…. ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு!

-

- Advertisement -

சண்முக பாண்டியன் வாணவேடிக்கை பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் ‘கேப்டன்’ என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன், ‘சகாப்தம்’, ‘மதுர வீரன்’ மற்றும் ‘படைத் தலைவன்’, கொம்பு சீவி போன்ற திரைப்படங்களில் தனது வித்தியாசமான நடிப்பையும், ஆக்ஷன் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சண்முக பாண்டியனின் 'வாணவேடிக்கை'.... ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு! அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வாணவேடிக்கை’. தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய திரு இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்வி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக சிவானி ராஜசேகர் நடித்துள்ளார். மேலும் சரவணன், ஜெயபிரகாஷ், இந்துமதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் நவம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகத் படக்குழு அறிவித்துள்ளது. சண்முக பாண்டியனின் 'வாணவேடிக்கை'.... ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு!சண்முக பாண்டியனின் மாஸான ஆக்ஷன் அவதாரத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படம் சினிமா வட்டாரத்தில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ