Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன் 2' ரிலீஸை முன்னிட்டு நயன்தாராவின் ஆன்மீக தரிசனம்... வீடியோ வைரல்!

‘மூக்குத்தி அம்மன் 2’ ரிலீஸை முன்னிட்டு நயன்தாராவின் ஆன்மீக தரிசனம்… வீடியோ வைரல்!

-

- Advertisement -

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஸ்டார் நடிகையான நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘மூக்குத்தி அம்மன் 2’. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகை நயன்தாரா பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு நேரில் சென்று சிறப்புத் தரிசனமும் பூஜைகளும் செய்துள்ளார்.'மூக்குத்தி அம்மன் 2' ரிலீஸை முன்னிட்டு நயன்தாராவின் ஆன்மீக தரிசனம்... வீடியோ வைரல்! கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்த நயன்தாரா, அங்கு வந்திருந்த பெண் பக்தர்களுக்குத் தனது கையால் புடவைகளும், சுடச்சுட அன்னதானமும் வழங்கி இறை அருள் பெற்றுள்ளார். நயன்தாரா, கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். வரும் நவம்பர் 6-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்க முன்பதிவு தொடங்கப்பட்டு தியேட்டர்கள் அனைத்திலும் டிக்கெட் விற்பனை அதிவேகமாக நடைபெற்று வருகிறது.'மூக்குத்தி அம்மன் 2' ரிலீஸை முன்னிட்டு நயன்தாராவின் ஆன்மீக தரிசனம்... வீடியோ வைரல்!ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கு அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா மீண்டும் கம்பீரமான தோற்றத்தில் நடித்திருக்க, அவருடன் இணைந்து ரெஜினா, ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதியின் அதிரடி இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ