HomeBreaking Newsஎனது கைகள் கறைபடியாதவை – ஜாமீன் மனு விசாரணையின்போது அன்பில் மகேஷ் உருக்கம்!

எனது கைகள் கறைபடியாதவை – ஜாமீன் மனு விசாரணையின்போது அன்பில் மகேஷ் உருக்கம்!

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், தனது கைகள் கறைபடியாதவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எனது கைகள் கறைபடியாதவை – ஜாமீன் மனு விசாரணையின்போது அன்பில் மகேஷ் உருக்கம்!

அன்பில் மகேஷை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

we-r-hiring

விசாரணையின்போது போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அன்பில் மகேஷ் முறையாகப் பதிலளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், திருச்சி மற்றும் சென்னையில் இருந்து அன்பில் மகேஷின் ஆடிட்டர்கள் நேரில் வந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சாட்சிகளைக் கலைக்கவோ, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவோ எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதால் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கிடையே, ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது பேசிய அன்பில் மகேஷ், “என் மீது கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யான குற்றச்சாட்டுகள்.

எனது கைகள் கறைபடியாதவை என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

மேலும், அரசகுமார் பொய் கூறியிருந்தால் அதற்கு அன்பில் மகேஷ் என்ன செய்ய முடியும் என்றும், லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டவர்களை போலீசார் ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

அதோடு, அரசகுமார் தான் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்ததாகவும் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டினார்.

ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அன்பில் மகேஷ் தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்த வாதங்களும் குற்றச்சாட்டுகளும் வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஜாமீன் வழங்குவது தொடர்பான நீதிமன்றத்தின் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ