Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம்: கமல்ஹாசன் கடும் கண்டனம் – “தமிழுக்கு இதைவிடப் பெரிய...

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம்: கமல்ஹாசன் கடும் கண்டனம் – “தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!”

-

- Advertisement -

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம்: கமல்ஹாசன் கடும் கண்டனம் – “தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!”

இந்த விவகாரம் தமிழுக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய அவமானம் என்றும், இதற்குக் காரணமானவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், போலி நூல்கள் எனக் குற்றம்சாட்டப்படும் புத்தகங்கள் அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், அவற்றை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புத்தகங்கள் மூலம் அறிவையும் சிந்தனையையும் வளர்க்க வேண்டிய நூலகங்களில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசனின் கண்டனமும் அவரது கோரிக்கையும் பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரத்தை மீண்டும் அரசியல் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு? சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

MUST READ