Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

-

- Advertisement -

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் – கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தல்!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள புகாருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இதுதொடர்பாக 10.11.2026 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தவெக உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், தொடர்ந்து மதுபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்குத் தனிப்பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களும் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கண்ணியக் குறைவானவை என்றும், ஒழுக்கக்கேடான செயல்கள் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த விவகாரத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.

மேலும், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்தது யாராக இருந்தாலும் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அருள் விக்னேஷ் குற்றச்சாட்டுகளை மறுத்து, அதிகாரிகள் மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பதாகவும், தன் மீதும் தவெக மீதும் எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்புவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் – தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு!

MUST READ