spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுன்றக்குடி அடிகளாரிடம் ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்

குன்றக்குடி அடிகளாரிடம் ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

குன்றக்குடி அடிகளாரிடம் ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்

காரைக்குடி பகுதியில் பல்வேறு திருமண விழாக்களில் பங்கேற்க வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின்

குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது மணிமண்டபத்திற்கு கலைஞர் அடிகல் நாட்டியதையும் அவரே திறந்து வைத்தற்கான கல்வெட்டையும் பொன்னம்பல அடிகளார் சுட்டிக்காட்டி விளக்கினார். அங்கு அண்ணா, கலைஞர், குன்றக்குடி அடிகளாருடன் உள்ள போட்டோ களையும் அடிகளாருக்கும் கலைஞருக்கும் இருந்த நெருக்கமான நட்பு குறித்தும் அங்கிருந்த புகைப்படங்களை பார்த்தும் வியப்படைந்தார்.

we-r-hiring

Image

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பண் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

MUST READ