Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனுடன் கைகோர்த்த 'மொத ராத்திரி' பட இயக்குனர்.... லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

கமல்ஹாசனுடன் கைகோர்த்த ‘மொத ராத்திரி’ பட இயக்குனர்…. லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

-

- Advertisement -

மொத ராத்திரி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.கமல்ஹாசனுடன் கைகோர்த்த 'மொத ராத்திரி' பட இயக்குனர்.... லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் மொத ராத்திரி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ராஜா கருப்பசாமி இயக்கியிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் ராஜா கருப்பசாமி. நகைச்சுவை – எமோஷனல் கலந்த குடும்ப படமாக வெளியான இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது. இதைத்தொடர்ந்து ராஜா கருப்பசாமி, மொத ராத்திரி பாகம் 2 படத்தை இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தில் மீதானே எதிர்பார்க்கும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.கமல்ஹாசனுடன் கைகோர்த்த 'மொத ராத்திரி' பட இயக்குனர்.... லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்! இது தவிர ராஜா கருப்பசாமி, கமல்ஹாசன் உடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது ராஜா கருப்பசாமி, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கப் போவதாக ஏற்கனவே பேச்சு அடிபட்டது. அதன்படி இந்த படத்தின் பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் இயக்குனர் யார் என்பது குறித்த தகவலை இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ