Homeசெய்திகள்பொழுதுபோக்கு"என் வாழ்க்கையின் உண்மையான ஃபெமினிஸ்ட் என் அப்பாதான்!" – மனம் திறந்த ஸ்ருதி ஹாசன் 

“என் வாழ்க்கையின் உண்மையான ஃபெமினிஸ்ட் என் அப்பாதான்!” – மனம் திறந்த ஸ்ருதி ஹாசன் 

-

- Advertisement -

Shruti Hassan
பிரபல யூடியூப் சேனலின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில், மூத்த நடிகை சுஹாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கிய நேர்காணலில் பிரபல நடிகையும், இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். திரைத்துறை அனுபவங்கள், தந்தை கமல் ஹாசன் குறித்த பசுமையான நினைவுகள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகப் பார்வைகள் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் இந்நிகழ்ச்சியில் மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

தந்தை கமல் ஹாசனுடன் ஒரு ‘ஃபேன் மொமெண்ட்’!

உலகநாயகன் கமல் ஹாசனுடன் தனக்குள்ள அழகான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஸ்ருதி ஹாசன், தன் குடும்பத்தினருடன் சுற்றிய பழைய தருணங்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

குறிப்பாக, ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகில் தன் அக்காவுக்கு வாங்கிய டூவீலரின் முதல் ரைடுக்குக் கமல் ஹாசன் சென்ற சம்பவத்தையும், அப்போது வழியில் சென்ற கல்லூரிப் பெண் ஒருவர் கமலைப் பார்த்து ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றபோது, அவர் சிறிதும் ஜாடை மாற்று இல்லாமல் சிரித்துக்கொண்டே “நான்தான்… நான்தான்…” என்று கலகலப்பாகக் கூறிய சுவாரஸ்யமான ரசிகர் தருணத்தைப் பகிர்ந்து அரங்கில் சிரிப்பலை ஏற்படுத்தினார்.

விமர்சனங்களுக்கு ஸ்ருதி ஹாசனின் ‘சாவேஜ்’ பதில்கள்!

பொதுவெளியில் சினிமா பிரபலங்கள், குறிப்பாகப் பெண் நடிகைகள் எதிர்கொள்ளும் சில விசித்திரமான மற்றும் ஊடுருவும் கேள்விகளுக்குச் சற்றும் தயங்காமல் தனது தனித்துவமான பாணியில் நமுட்டுச் சிரிப்புடன் அவர் பதிலளித்தார்:

shruti Hassan
* திருமணம் மற்றும் வதந்திகள்: “ஸ்ருதி, எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? எப்போது விவாகரத்து வாங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்விகளுக்கு, தனக்கே அது குறித்துத் தெரியாது என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், தற்போது தான் ‘சிங்கிள்’ (Single) தான் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

* பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த வெளிப்படைத்தன்மை: தன் மூக்கின் தோற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது தன் விருப்பம் என்று தைரியமாகப் பதிலளித்த அவர், இது போன்ற விஷயங்களில் பொய் சொல்வதை விட வெளிப்படையாக இருப்பதே சிறந்தது எனத் தெரிவித்தார்.

* சினிமா விமர்சனங்கள்: “உங்களை யார் நடிக்கச் சொன்னது? வேறு ஐடி கம்பெனிக்குப் போகலாமே?” போன்ற விமர்சனங்கள் குறித்துப் பேசுகையில், அத்தகைய கேள்விக்குத் தான் கூலாகப் பதிலளித்துவிட்டுச் செல்வதாகக் குறிப்பிட்டார்.

பெமினிசமும் சமூகப் பார்வைகளும்

பெமினிசம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய ஸ்ருதி ஹாசன், சமூகம் மற்றும் பெண்களின் உரிமைக்காக ஆரம்பகாலத்தில் போராடியவர்கள்தான் உண்மையான பெமினிஸ்டுகள் என்றார். மேலும், தனது தந்தையான கமல் ஹாசன் தமக்கு எப்போதுமே சிறந்த ரோல் மாடலாகவும், பாதுகாப்பான ஆதரவு சக்தியாகவும் இருந்துள்ளார் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஆடைகள் குறித்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்த அவர், குற்றங்களை விடுத்துவிட்டுப் பெண்களின் ஆடைகளைக் குறை கூறுவது முற்றிலும் தவறு என்றும், அதேசமயம் எந்த இடத்திற்குச் செல்லும்போது எத்தகைய உடைகளை அணிய வேண்டும் என்ற நடைமுறைப் புரிதலும் (Practicality) அவசியமானது என்றும் தன் முதிர்ச்சியான கருத்தைப் பதிவு செய்தார்.

திரையரங்குகளில் அலைமோதும் கூட்டம்…. இமாலய வெற்றியை நோக்கி சூர்யாவின் ‘சீன்’!

MUST READ