பாகிஸ்தான் தனது ஆளில்லா விமானப் படைத்திறனை விரிவுபடுத்தும் நோக்கில், துருக்கியைச் சேர்ந்த பசிபிக் டெக்னாலஜி நிறுவனத்துடன் மிகப்பெரிய கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ‘மெர்குட்’ ( வகையைச் சேர்ந்த 1 லட்சம் ஆளில்லா விமான அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆளில்லா வான்வழி மற்றும் தரைவழி அமைப்புகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட உள்ளன.
ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள தளவாடங்கள்:
பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்புக் கழகமான NRTC உடன் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிய நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1 லட்சம் மெர்குட் வகை ட்ரோன்கள், 10 ஆல்பின் ஆளில்லா ஹெலிகாப்டர்கள், 25 தும்ருல் மினி ஆளில்லா ஹெலிகாப்டர்கள், 500 டெலி வகை ஆளில்லா ஆயுத அமைப்புகள் மற்றும் 250 கோர்கன் தானியங்கி தரைவழி ஆதரவு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் வழங்கப்பட உள்ளன.
பாகிஸ்தானிலேயே உற்பத்தி செய்ய ஏற்பாடு:
இந்த ஒப்பந்தம் வெறும் தளவாடக் கொள்முதலுடன் முடிவடையவில்லை. பாகிஸ்தானிலேயே அவற்றை உள்ளூரில் அசெம்பிள் செய்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் கால அளவு மூன்று ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவிடப்பட்ட தளவாடங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் விரைவில் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் முக்கிய நகர்வு:
ட்ரோன் தொழில்நுட்பம் உலக நாடுகளின் பாதுகாப்புத் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த ஒப்பந்தம் அதன் ஆளில்லா தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து தளவாடங்களைப் பெறுவதுடன், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வாய்ப்பையும் உருவாக்குவது பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொழில்துறை வளர்ச்சியில் கவனம் பெற்றுள்ளது.
22 மணி நேரம் தனிமைச் சிறையா? – பாகிஸ்தான் நீதிபதிகளுக்கு இம்ரான் கான் கடிதம்
