Homeசெய்திகள்உலகம்வாஷிங்டனைக் குறிவைக்கும் ஈரானின் 4,000 கி.மீ. ஏவுகணை: அமெரிக்காவை நடுங்க வைக்கும் அதிநவீன ஆயுதம்!

வாஷிங்டனைக் குறிவைக்கும் ஈரானின் 4,000 கி.மீ. ஏவுகணை: அமெரிக்காவை நடுங்க வைக்கும் அதிநவீன ஆயுதம்!

-

- Advertisement -

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கில், ஈரானின் புதிய ஏவுகணைத் திட்டம் அமெரிக்காவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.  குறிப்பாக, 4,000 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய ஈரானின் புதிய ஏவுகணைகள் மத்திய கிழக்கைத் தாண்டி ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் குறிவைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

​பாலிஸ்டிக் ஏவுகணைகளின் புதிய வரம்பு

பொதுவாக ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பு 2,000 கிலோமீட்டர் என்றே கூறப்பட்டு வந்தது. இதற்குக் காரணமாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையான (IRGC) தன்னாக்கவே ஒரு வரம்பை நிர்ணயித்திருந்தது.ஆனால் , தற்போது அந்த 2,000 கி.மீ. வரம்பை ஈரான் நீக்கியுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி. அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல் திறனை மேலும் விரிவுபடுத்துவதில் தீவிரமாக இறங்கியுள்ளது.

​கொர்ராம்ஷெர்-4 (Khorramshahr-4) அல்லது கைபர் ஏவுகணை

இந்த விவகாரத்தின் மையமாக இருப்பது ஈரானின் ‘கொர்ராம்ஷெர்-4’ அல்லது ‘கைபர்’ ஏவுகணையாகும் .

​அதிகரித்த தொலைவு: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தப் பாலிஸ்டிக் ஏவுகணையின் அதிகாரப்பூர்வ தாக்குதல் வரம்பு சுமார் 2,000 கி.மீ. ஆகும். இருப்பினும், இதில் சுமந்து செல்லும் வெடிபொருட்களின் எடையைக் குறைப்பதன் மூலம், தாக்குதல் தூரத்தை 3,000 முதல் 4,000 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடியும் என்று பாதுகாப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​அதிவேகம்: வளிமண்டலத்திற்கு வெளியே ஒளியை விடப் பலமடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை, வெறும் 12 நிமிடங்களில் ஏவுவதற்குத் தயார் செய்யப்பட்டுவிடும்.

​ஏமாற்றும் தொழில்நுட்பம்: இதன் மேம்பட்ட வழிகாட்டுதல் தொழில்நுட்பம் மற்றும் ரேடார்களை ஏமாற்றும் திறன் காரணமாக, எதிரி நாடுகளின் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளால் இதனைக் கண்டறிந்து அழிப்பது மிகவும் கடினமானதாகும்.

​அமெரிக்காவுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்

இதுவரை ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தல் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் மட்டுமே இருந்து வந்தது. ஆனால், எதிர்காலத்தில் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கும் சென்று சேரக்கூடிய திறன் ஈரானுக்குக் கிடைத்துள்ளதால், இது வாஷிங்டனுக்கும் அமெரிக்காவின் ராணுவத் தளங்களுக்கும் மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது

MUST READ