Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா? – ஹென்றி...

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா? – ஹென்றி டிபேன் கேள்வி!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே சட்டமன்ற உறுப்பினரால் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன், பணியில் உள்ள மற்ற பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை அரசு எப்படி உறுதி செய்யும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா? – ஹென்றி டிபேன் கேள்வி!

இதுதொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள். எனவே, இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக வழக்குப் பதிவு செய்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல; தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகும்.

மாநில மகளிர் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இதுபோன்ற விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் தேசிய மகளிர் ஆணையம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணியில் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், தமிழகம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

போதையில் வந்ததாகக் கூறப்படும் நபரின் செயல்களை மறைக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில், மற்ற பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அளிக்க முடியும்? இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும்.

மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கூடாது; அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணியமாக நடந்துகொள்ளாத சட்டமன்ற உறுப்பினரை இன்னும் எவ்வளவு காலம் பாதுகாக்கப் போகிறார்கள்?

இந்தச் சம்பவம் இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுவது உண்மையானால், அது மிகவும் ஆபத்தானது. எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் மௌனமாக இருப்பது சரியான அணுகுமுறை அல்ல. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹென்றி டிபேன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராதிகா வலியுறுத்தல்!

MUST READ