தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரள- தென் கர்நாடக கடலோரம், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.