தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இடியாப்பம் விற்பவர்களும் இனி உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனையாளர்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் இடியாப்பம் சரியாக தயாரிக்காமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இனி இடியாப்பம் விற்பவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத்துறை உரிமத்தை பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட வேண்டும். அதனை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆண்டுக்கு ஒருமுறை உணவு பாதுகாப்புத்துறை உரிமம் புதுப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இடியாப்பம் தயாரிக்கும் போது பாதுகாப்பாகவும், தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடியாப்பம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் போது கையுறை, தலையுறை உள்ளிட்டவை பயன்படுத்த வேண்டும். காய்ச்சல், நோய் தொற்று பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் இந்த விற்பனையில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இடியாப்பம் விற்பனையாளர்கள் காய்ச்சல் உள்ளிட்ட எந்த ஒரு பாதிப்புகளும் இல்லாமல் இடியாப்பத்தை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!


