Homeசெய்திகள்சினிமாஅருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் உருவாகும் 'சூர்யா 49'.... சம்பவத்திற்கு தயாராகும் கூட்டணி!

அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் உருவாகும் ‘சூர்யா 49’…. சம்பவத்திற்கு தயாராகும் கூட்டணி!

-

- Advertisement -

சூர்யா 49 படம் குறித்த புதிய தகவல் கசிந்துள்ளது.அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் உருவாகும் 'சூர்யா 49'.... சம்பவத்திற்கு தயாராகும் கூட்டணி!

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான சீன் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வெற்றி நடை போட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் தனது 48-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையிலும், அடுத்தடுத்த படங்களில் சூர்யா கமிட்டாகி வருகிறார். அந்த வகையில், சூர்யாவின் 49-வது படத்தை ‘கேப்டன் மில்லர்’, ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘டிசி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கலாம் என்ற பேச்சு சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
​இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில், இப்படத்திற்கு நிச்சயம் ‘ஏ’ சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் உருவாகும் 'சூர்யா 49'.... சம்பவத்திற்கு தயாராகும் கூட்டணி!அருண் மாதேஸ்வரனின் வழக்கமான மேக்கிங் ஸ்டைலில், ராவான, அதிரடியான மற்றும் ஆழமான ஆக்‌ஷன் திரில்லர் படமாக இது உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. ​இருப்பினும், இந்தக் கூட்டணி உண்மையில் அமையுமா? இல்லையா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

MUST READ