Homeசெய்திகள்சினிமாரஜினியின் 'தர்மன்' பட அடுத்தகட்ட ஷூட்டிங் அப்டேட்!

ரஜினியின் ‘தர்மன்’ பட அடுத்தகட்ட ஷூட்டிங் அப்டேட்!

-

- Advertisement -

ரஜினியின் தர்மன் பட அடுத்தகட்ட ஷூட்டிங் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.ரஜினியின் 'தர்மன்' பட அடுத்தகட்ட ஷூட்டிங் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். கமல்ஹாசன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். ராம் பொத்தினேனி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும், ரஜினி இந்தப் படத்தில் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில், ஏற்கனவே அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதே சமயம், இந்தப் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றனர்.ரஜினியின் 'தர்மன்' பட அடுத்தகட்ட ஷூட்டிங் அப்டேட்!மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஷெட்யூல் அடுத்த மாதம் தொடங்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. இனி வரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு முன்பாகவோ நிறைவடையும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ