துருவ் விக்ரம் நடிக்கும் ஜாக்கி பட கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம் கடைசியாக மாறி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்ததோடு மட்டுமல்லாமல் படமானது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பாராட்டுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து, துருவ் விக்ரம், கரன் அரவிந்த் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜாக்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெய் சூர்யா .எஸ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க விக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் இப்படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து சாய் தீனா, பிரித்விராஜ் மற்றும் அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள ஏஓடி படத்தின் நடிகையான சாத்விகா வீரவல்லி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
