Homeசெய்திகள்சினிமாசல்மான் கான் படத்தில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ரோலா?.... 'மான்ஸ்டர்' படத்தின் வேற லெவல் ட்விஸ்ட்!...

சல்மான் கான் படத்தில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ரோலா?…. ‘மான்ஸ்டர்’ படத்தின் வேற லெவல் ட்விஸ்ட்! ​

-

- Advertisement -

சல்மான் கான் நடிக்கும் மான்ஸ்டர் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சல்மான் கான் படத்தில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ரோலா?.... 'மான்ஸ்டர்' படத்தின் வேற லெவல் ட்விஸ்ட்! ​

நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்ததாக ‘சந்திரமுகி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துப் பெரிய உச்சத்தைத் தொட்டார். தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இந்தியில் ‘ஜவான்’ படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, அடுத்து சல்மான் கானுடன் இணைந்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
​இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இப்படம், சல்மான் கான் மற்றும் நயன்தாரா இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நயன்தாரா சல்மான் கானின் மனைவியாக நடிப்பதாகக் கூறப்பட்டாலும், அவரது கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒளிந்திருக்கிறது. அதாவது நயன்தாரா, தனது சொந்தக் கணவரையே வீழ்த்தும் ஒரு அண்டர்கவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.சல்மான் கான் படத்தில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு ரோலா?.... 'மான்ஸ்டர்' படத்தின் வேற லெவல் ட்விஸ்ட்! ​ ​முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் இந்த சுவாரஸ்யமான மோதலும், சஸ்பென்ஸ் மற்றும் எமோஷன் கலந்த திரைக்கதையும் ஆக்‌ஷன் டிராமாவுக்கு புதிய பலத்தைச் சேர்க்கும் வகையில் அமையும் என்று நம்பப்படுகிறது. மேலும் வலுவான நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகும் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ