Homeசெய்திகள்சினிமாராம் சரணின் வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.... 'RC17' படத்தின் அதிரடி அப்டேட்!

ராம் சரணின் வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்…. ‘RC17’ படத்தின் அதிரடி அப்டேட்!

-

- Advertisement -

ராம் சரணின் RC17 படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. ராம் சரணின் வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.... 'RC17' படத்தின் அதிரடி அப்டேட்!

​தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் நடிப்பில் கடைசியாக ‘பெத்தி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, ராம் சரண் தனது 17வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக RC17 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்டப் பட்ஜெட் படமான ‘RC17’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.ராம் சரணின் வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.... 'RC17' படத்தின் அதிரடி அப்டேட்!​இந்நிலையில், ‘RC17’ படத்துக்காக ராம் சரண் தனது அடுத்தகட்ட ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பணிகளைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பெத்தி’ படத்திற்காக வைத்திருந்த நீண்ட முடி கொண்ட லுக்கை மாற்றியுள்ள ராம் சரண், உடல் எடையைக் குறைத்து புதிய தோற்றம் மற்றும் உடற்கட்டுடன் திரையில் புது அவதாரம் எடுக்கத் தயாராகி வருகிறார். இதற்காக ரகசிய இடம் ஒன்றில் அவர் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் ராம் சரண் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இன்னும் அதிகமாக்கியுள்ளது.

 

MUST READ