HomeBreaking Newsசெக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு எழுப்பும் கேள்விகள் – முதலமைச்சர்...

செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு எழுப்பும் கேள்விகள் – முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? கனிமொழி எம்.பி. கேள்வி!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு எழுப்பும் கேள்விகள் – முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? கனிமொழி எம்.பி. கேள்வி!இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், நவம்பர் 4ஆம் தேதியே புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நவம்பர் 13ஆம் தேதிதான் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட FIR-க்கு நவம்பர் 14ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்கள்கூட இல்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்த இந்த மரணம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம் காக்கப் போகிறார் என்றும், காவல்துறை உண்மையிலேயே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாலகிருஷ்ணனின் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மற்றும் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தந்தையை இழந்துள்ள இரண்டு குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

 

MUST READ